பார்த்த முதல் நாளே... கமலினி முகர்ஜியா இது? சுத்தமாக அடையாளமே தெரியலையே...

1

தமிழில், 2006இல் வேட்டையாடு விளையாடு படம் மூலம் அறிமுகமானவர் கமலினி முகர்ஜி.பின்னர், தொடர்ந்து தெலுங்கு படத்தில் கவனம் செலுத்திய அவர், 2009இல் காதல்னா சும்மா இல்ல என்ற தமிழ் படத்தில்தான் நடித்தார். தெலுங்கு, தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம், பெங்காலி உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். 

சேகர் கம்முலா இயக்கிய 'ஆனந்த்' என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமான இவர், அடுத்து 'ஸ்டைல்', 'கோதாவரி' போன்ற படங்கள் மூலம் ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்தார். குறிப்பாக 'ஹேப்பி டேஸ்' என்ற திரைப்படத்தில் அவர் நடித்த ஆங்கிலப் பேராசிரியர் கேரக்டர், இளைய தலைமுறையினரின் மத்தியில் அவரை மேலும் பிரபலப்படுத்தியது.

தனது இயல்பான நடிப்பால், எளிமையின் அழகுக்கு அடையாளமாக அவர் கருதப்பட்ட இவர், 2006-ம் ஆண்டு கௌதம்மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தில் அவரின் மனைவியாக நடித்திருந்தார். அதன்பிறகு காதல்னா சும்மா இல்ல, இறைவி ஆகிய தமிழ் படங்களில் நடித்திருந்த கமலினி முகர்ஜி, கடைசியாக கடந்த 2016-ம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான புலிமுருகன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். 

பல வருடங்களாகத் தெலுங்கு திரையுலகில் இருந்து விலகி இருந்த கமலினி, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெலுங்கில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான ராம் சரண் மற்றும் காஜல் அகர்வால் நடித்த 'கோவிந்துடு அந்தரிவாடேலே' என்ற படம் தான் நான் தெலுங்கு சினிமாவில் இருந்து விலக முக்கியக் காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், அந்தப் படக்குழுவினருடன் பணிபுரிந்த அனுபவம் எனக்கு மிகவும் சிறப்பாக இருந்தது. என் சக நடிகர்கள் அனைவரும் மிகவும் ஆதரவாக இருந்தனர். ஆனால், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு என்னிடம் சொல்லப்பட்ட எனது கேரக்டர், படம் வெளியாகும் போது முற்றிலும் வேறுமாதிரி இருந்தது. இது என்னை மிகவும் காயப்படுத்தியது. படம் முடிந்ததும், நான் நடித்ததை பார்த்த பிறகு வெட்கமாக இருந்தது. அதற்காக நான் சண்டையிடவோ, வம்பு செய்யவோ விரும்பவில்லை. அதனால்தான் தெலுங்கில் நடிக்க கூடாது என்று முடிவு செய்து, மற்ற மொழிகளில் நடித்தேன்.

தற்போது மொத்தமாக சினிமாவை விட்டு விலகியிருப்பவர் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.

படங்களில் பார்த்த கமலினி முகர்ஜி இப்போது சுத்தமாக ஆளே மாறியிருக்கும் புகைப்படம் வெளியாக ரசிகர்கள் அவரா இது என வியப்பாக பார்த்து வருகிறார்கள்.

1

Share this story