விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது!

விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. நேற்று (ஜூன் 22) விஜய் தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது.
‘என் நெஞ்சில் குடியிருக்கும்’ என்ற விஜய்யின் குரலுடன் க்ளிம்ப்ஸ் தொடங்குகிறது. போர்க்களம் போல் காட்சியளிக்கும் ஒரு பகுதியில் கையில் வாளுடன் போலீஸ் உடையில் நடந்து வருகிறார். முறுக்கு மீசை கெட் அப் ‘மெர்சல்’ படத்தை நினைவுப்படுத்துகிறது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ள இந்த க்ளிம்ப்ஸ் வீடியோவை விஜய் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த பர்ஸ்ட் ரோர் வீடியோ வெளியான 15 நிமிடங்களில் 1 மில்லியனுக்கும் அதிகமாக ரியல் டைம் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரோடக்சன்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.