அசரவைக்கும் ‘தி ராஜாசாப்’ டீசர்... ஹாரர் ஃபான்டஸி ரசிகர்களுக்கு செம விருந்து

இந்தியாவின் மிகப்பெரிய ஹாரர்-ஃபான்டஸி படமான ‘தி ராஜாசாப்’ டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
‘கல்கி 2898 ஏடி’ படத்தைத் தொடர்ந்து ரெபல் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் அடுத்து திரைக்கு வர உள்ள படம் ‘தி ராஜாசாப்’. ஹாரர்-ஃபான்டஸி படமான இப்படத்தை தெலுங்கு இயக்குநர் மாருதி இயக்கியுள்ளார். தமன் இசையமைத்துள்ள இப்படத்தை பீபுள் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படத்தில் நிதி அகர்வால், மாளவிகா மோகனன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஹாரர் ரொமான்டிக் ஜானரில் இப்படம் உருவாகிறது.
இந்நிலையில் ‘தி ராஜாசாப்’ டீசர் ஐதராபாத்தில் பிரமாண்டமாக வெளியிடப்பட்டது. இந்தியாவில் இதுவரை உருவாக்கப்பட்ட மிகப்பெரிய ஹாரர்-ஃபான்டஸி செட்டில் இந்த விழா நடந்தது. இந்த டீசர் பழமையான புராணக் கதைகள், திகில் மற்றும் மர்மங்களை நேர்த்தியாக இணைத்து, கிராண்டியர் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இசை மாஸ்ட்ரோ தமன் எஸ் வழங்கிய பின்னணி இசை, தோள்கள் புடைக்கும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. டீசரில் பிரபாஸ் இரண்டு மாறுபட்ட தோற்றங்களில் வெளிப்படுகிறார். ஒன்று ஸ்டைலிஷான ஹீரோ தோற்றம், மற்றொன்று இருண்ட, மர்மமிக்க, பரபரப்பூட்டும் தோற்றம். அவரது எனர்ஜி மற்றும் நடித்த விதம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. டீசரின் இறுதியில் தோன்றும் சஞ்சய் தத், அதிரடியான தோற்றத்துடன் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார். நிதி அகர்வால், மாளவிகா மோகனன், ரித்தி குமார் போன்ற நடிகைகளும் இப்படத்தில் முக்கிய பங்காற்றியுள்ளனர்.