உருவாகிறது ‘மிருகம்’ படத்தின் இரண்டாம் பாகம்… நடிகர் யார் தெரியுமா!?

ஆதி நடிப்பில் உருவான மிருகம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது.
2007-ம் ஆண்டு சாமி இயக்கத்தில் ஆதி, பத்மபிரியா, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘மிருகம்’ படம், அதில் இடம் பெற்றிருந்த இரட்டை அர்த்தமுள்ள காட்சிகளுக்காக சர்ச்சையை உருவாக்கியது. இருந்தாலும் மக்களிடம் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. பல பெண்களிடம் உறவு வைக்கும் ஒருவர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு அடையும் இன்னல்களை மிருகம் படம் பேசியிருந்தது.
தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. அதில் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆர்.கே.சுரேஷ் நடிக்கவுள்ளார்.
ஆர்.கே.சுரேஷ் தயாரிப்பாளராக சினிமாவில் நுழைந்தார். தற்போது நடிகராகவும் தன்னை மெருகேற்றிக் கொண்டு வருகிறார். தற்போது ‘மிருகம் 2’ படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகியிருக்கிறார்.
இது குறித்து பதிவிட்டுள்ள அவர் “மிருகம் 2 படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு பூஜை நடைபெற்றது! மிருகம் 1 படம் ஒரு சிறந்த வெற்றி பெற்றது. மேலும் மிருகம் 2 படத்தில் ஹீரோவாக நடிப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்!”என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஆர்.கே.சுரேஷ், சூப்பர் ஹிட் மலையாள படமான ‘ஜோசப்’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘விசித்திரன்’ படத்தின் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்காக அவர் 108 கிலோ வரை எடை அதிகரித்து, பின்னர் 20 கிலோவிற்கு மேல் உடல் எடையைக் குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

