சூர்யாவின் கிளீன் ஷேவ் கெட்டப்... 3 மாதங்களில் புதிய படம்

நடிகர் சூர்யாவின் 46 வது திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஐதராபாத்தில் தொடங்குகிறது.
லக்கி பாஸ்கர் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 46வது திரைப்படத்தில் நடிக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்கிறார். சூரரைப் போற்று வெற்றியைத் தொடர்ந்து ஜிவி பிரகாஷ் மீண்டும் சூர்யாவின் 46 வது படத்திற்கு இசையமைக்க உள்ளார். சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் படத்திற்கான பூஜை போடப்பட்டது அதேபோல கடந்த வாரத்தில் பழனி சென்ற சூர்யா 46 பட குழுவினர் படத்திற்காக சிறப்பு பூஜையும் செய்தனர். ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நமது 45-வது படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், தற்பொழுது இந்த படத்தில் சூர்யா இணைந்துள்ளார். இதற்கான படப்பிடிப்பு இன்று ஐதராபாத்தில் தொடங்கியுள்ளது.
இந்த படத்திற்கான சூர்யாவின் கிளீன் ஷேவ் கெட்டப் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இப்படம் அடுத்த மூன்று மாதத்திற்குள் முடிக்கப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.