‘ஜானகி v/s State Of Kerala' படத்தின் பெயரை மாற்ற படக்குழு சம்மதம்

s

சென்சார் போர்டு எதிர்ப்பை தொடர்ந்து ‘ஜானகி v/s State Of Kerala' படத்தின் பெயரை மாற்ற படக்குழு சம்மதம் தெரிவித்துள்ளது.

Janaki vs State Of Kerala - Motion Poster | Suresh Gopi & Anupama  Parameswaran | Pravin Narayanan

பிரவீன் நாராயணன் எழுதி இயக்கியுள்ள மலையாள படம் ‘ஜானகி v/s State Of Kerala'. இந்தப் படத்தில் சுரேஷ் கோபி மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதை காஸ்மோஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் என்ற பதாகையின் கீழ் ஜே. பனிந்திர குமார் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் பாலியல் வன்கொடுமையை பின்னணியாக கொண்ட படத்திற்கு ஜானகி எனப் பெயரிட சென்சார் போர்டு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், படத்தின் பெயரை மாற்ற படக்குழு சம்மதம் தெரிவித்துள்ளது. சீதையின் மற்றொரு பெயர் ஜானகி என்பதால் இப்படத்திற்கு ஜானகி எனப் பெயரிட சென்சார் போர்டு எதிர்ப்பு தெரிவித்தது. இதனையடுத்து  ‘ஜானகி v/s State Of Kerala' படத்தின் பெயரை மாற்றி JSK என பெயரிட முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கும் நிலுவையில் உள்ளது.

Share this story