இணையத்தில் வெளியானது தக் லைஃப்- படக்குழு அதிர்ச்சி

கமல் நடித்து திரையரங்கில் இன்று வெளியான தக் லைஃப் படம் இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர்.
சுமார் 30 வருடங்களுக்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள திரைப்படம் தான் ‘தக் லைஃப்’. இந்தப் படத்தில் கமலுடன் சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், நாசர், ஜோஜூ ஜார்ஜ் போன்ற பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்
நாயகன் படத்திற்கு பிறகு கமல் மணிரத்னம் கூட்டணியில் வெளியாகியுள்ள தக் லைஃப் திரைப்படம் தியேட்டரில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை பார்த்த பலரும் படம் நன்றாக விறுவிறுப்பாக உள்ளது என்று கூறியுள்ளனர் . பல சர்ச்சைக்கிடையே ரிலீஸ் ஆன ‘தக் லைஃப்’ திரைப்படம் இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். சென்னை ஐகோர்ட் ஏற்கனவே தடை விதித்துள்ள நிலையில் படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.