'தக் லைஃப்' - நாளை ஒருநாள் மட்டும் சிறப்பு காட்சிக்கு அனுமதி

thug life

'தக் லைஃப்' படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. நாளை ஒரு நாள் மட்டும் அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

thug life

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிம்பு, திரிஷா ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்' (Thug Life). மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தப்படம் நாளை திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், 'தக் லைஃப்' படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்க கோரி பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் தமிழ்நாடு அரசிடம் அனுமதி கோரப்பட்டது. 

Image

இதன் அடிப்படையில், ஜூன் 5ம் தேதி ஒரு நாள் மட்டும், ஒரு சிறப்புக் காட்சியை தமிழகத்தில் திரையிட அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி இறுதி காட்சி இரவு 2 மணி வரை (மொத்தம் 5 காட்சிகள்) திரையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this story