பவன் கல்யாண் படத்திற்கு டிக்கெட் விலை உயர்வு
பவன் கல்யாண் படத்திற்கு டிக்கெட் விலை உயர்த்தபட்டுள்ளது.

தெலுங்கு சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருந்தவர் பவன் கல்யாண். அரசியல் கட்சி ஆரம்பித்த அவர், தான் சந்தித்த இரண்டாவது சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வராகவும் இருக்கிறார். தேர்தலுக்கு முன்பாக அவர் “ஹரிஹர வீரமல்லு, ஓஜி, உஸ்தாத் பகத் சிங்” ஆகிய படங்களில் அவர் நடித்து வந்தார். அவற்றில் 'ஹரிஹர வீர மல்லு' படத்தின் படப்பிடிப்பு முடிந்து மே மாதம் வெளியாக இருந்தது. ஆனால் பவன் கல்யாணின் மகன் சிங்கப்பூரில் தீ விபத்தில் சிக்கினார். இதனால் பவன் கல்யாண் குடும்பத்தினர் சிங்கப்பூருக்கு சென்றார்கள். இதனால் ‘ஹரி ஹர வீர மல்லு’ படத்தின் டப்பிங் பணிகள் எதிலுமே பவன் கல்யாண் கலந்துகொள்ளவில்லை. இதனை முன்னிட்டு படத்தின் வெளியீடு தள்ளிபோய் கொண்டே இருந்தது. ஒருவழியாக நாளை இப்படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் பவன் கல்யாணின் `ஹரிஹர வீர மல்லு' படத்தின் ரிலீஸையொட்டி, டிக்கெட் விலையை உயர்த்தி தெலங்கானா அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஜூலை 23ம் தேதி இரவு 9 மணிக்கு திரையிடப்படும் சிறப்பு காட்சிக்கு 600 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

