‘ஆனந்தன் காடு’ - ஆர்யா நடிக்கும் புது படத்தின் அப்டேட்

ஆர்யா

ஆர்யா நடிக்கும் புது படத்திற்கு ‘ஆனந்தன் காடு’ என பெயரிட்டுள்ளது. படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்டு படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Image

கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் மற்றும் தயாரிப்பாளர் எனக் கலக்கி வருபவர் ஆர்யா. இவரின் நடிப்பில் இயக்குநர் முத்தையா இயக்கத்தில், கடந்த 2023ம் ஆண்டு தமிழில் காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம்  என்ற படமானது வெளியாகியிருந்தது. இந்த படத்தைத் தொடர்ந்து தெலுங்கில் ஒரு படத்தில் முக்கிய ரோலிலும், தமிழில் சில படங்களில் கேமியோ தோற்றத்திலும் நடித்திருந்தார். தமிழில் ஆர்யா நடிப்பில் மிஸ்டர் எக்ஸ் (Mr. X) என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.



இப்படத்தைத் தொடர்ந்து ஆர்யா மலையாள இயக்குநர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஆர்யா நடித்துவரும் ஆர்யா36 படத்தின் படத்தின் டைட்டில் டீசர் மற்றும் முதல் பார்வையைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்குப் படக்குழு “அனந்தன் காடு” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தில் உள்ளது.

Share this story