டாம் க்ரூஸ்க்கு கெளரவ ஆஸ்கர் விருது அறிவிப்பு
1750255741081

திரைத்துறைக்கு ஆற்றிய அளப்பறிய பங்கிற்காக ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ்க்கு கெளரவ ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹாலிவுட் அதிரடி நடிகர் மற்றும் தயாரிப்பாளரான டாம் குரூஸுக்கு கௌரவ ஆஸ்கார் விருது வழங்கப்பட உள்ளதாக அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் அறிவித்துள்ளது. வரும் நவம்பர் 16 ஆம் தேதி நடைபெறவுள்ள 16வது கவர்னர்ஸ் விருது விழாவில் இந்த விருதை டாம் க்ரூஸ் பெறவுள்ளார். நடன இயக்குனரும் நடிகருமான டெபி ஆலன் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளர் வின் தாமஸ் ஆகியோரும் கவர்னர் விருதுகள் என்று அழைக்கப்படும் அகாடமி கௌரவ விருதுகளைப் பெறுவார்கள்.