மக்கள் மனதைக் கொள்ளை கொண்ட டாப் தொலைக்காட்சி நடிகைகள்… உங்க ஃபேவரைட் இருக்காங்களா!?

சென்னை டைம்ஸ் பத்திரிக்கை வருடம் தோறும் மக்களால் மிகவும் விரும்பப்படும் நடிகர்கள், நடிகைகள், பிரபலங்கள் ஆகியோர்களின் பட்டியல்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது 2020-ம் ஆண்டின் மக்களால் மிகவும் விரும்பப்பட்ட டிவி பிரபலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
ரம்யா பாண்டியன்
இந்தப் பட்டியலில் ரம்யா பாண்டியன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஜோக்கர் படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்த ரம்யா பாண்டியனுக்கு அதன் பிறகு பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை.அடுத்து மொட்டை மாடி போட்டோஷூட் ஒன்றை வெளியிட்டு இளைஞர்களை தன வசம் இழுத்தார். அதன் பிறகு அவருக்கு ஏறுமுகம் தான். குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு, பிக்பாஸ் என பிரபலத்தின் உச்சிக்கு சென்று தற்போது இருக்கும் இடத்தைப் பிடித்துள்ளார். எனவே தான் மக்களால் அதிகம் விரும்பப்பட்ட நடிகைகளில் முத்லிடத்தைப் பிடித்துள்ளார்.
ரோஷ்னி ஹரிபிரியன்
குறும்படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்த ரோஷ்ணி ஹரிப்ரியன் பாரதி கண்ணம்மா சீரியல் வாயிலாக அனைத்து குடும்பங்களின் செல்லப்பிள்ளை ஆகியுள்ளார். கருப்பான தேகம் கொண்டவர்கள் கதாநாயகி ஆகமுடியாது என்ற பிற்போக்குத் தனத்தை உடைத்தெறிந்து மக்கள் மனதில் இடம் பிடித்த ரோஷ்ணி ஹரிப்ரியனுக்கு இந்தப் பட்டியலில் இரண்டாம் இடம்
பவித்ரா லட்சுமி
உங்களில் யார் அடுத்த பிரபு தேவா நடன நிகழ்ச்சி மூலம் தொலைக்காட்சியில் நுழைந்தார் பவித்ரா. அதையடுத்து ங்கலில் யார் ஆதுதா பிரபு தேவா மற்றும் மானாட மயிலாட மற்றும் சில ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்துகொண்டார்.
நீண்ட நாட்களாக சரியான வாய்ப்பிற்காக காத்திருந்த பவித்ராவுக்கு பலனாகக் கிடைத்தது தான் குக் வித் கோமாளி. அந்த நிகழ்ச்சி மூலமாக பவித்ரா புகழோடு சேர்ந்து புகழின் உச்சிக்கு சென்றார். அவருக்கு இந்தப் பட்டியலில் 3-ம் இடம்.
நக்ஷத்ரா நாகேஷ்
குறும்படங்கள் வாயிலாக தனது பயணத்தைத் துவங்கிய நக்ஷத்ரா டிவி தொகுப்பாளினியாக வளர்ந்தார். தற்போது முக்கியமான பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் சீரியல்களில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். இந்தப் பட்டியலில் நக்ஷ்த்திரா 4-ம் இடம் பிடித்துள்ளார்.
ஆயிஷா
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சத்யா சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ள ஆயிஷாவுக்கு 5-ம் இடம்.
சிவானி நாராயணன்
சீரியல் உலகின் மிகவும் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்துகொண்டு மிகவும் பிரபலமாகினார். சிவாணிக்கு இந்தப் பட்டியலில் 6-ம் இடம் கிடைத்துள்ளது.
ஆல்யா மானசா
ராஜா ராணி சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ஆல்யா. அதே சீரியலில் ஜோடியாக நடித்த சஞ்சீவைத் திருமணம் செய்து கொண்டு நிஜ வாழ்விலும் ஜோடியானார்கள். தற்போது பல சீரியல்களில் இருவரும் நடித்து வருகின்றனர். சின்னத்திரை ஜோடிகளில் இவர்கள் இருவரும் மிகவும் பிரபலமானவர்கள். மக்கள் மனதில் இடம் பிடித்த ஆல்யா இந்தப் பட்டியலில் 7-ம் இடம் பிடித்துள்ளார்.
திவ்யதர்ஷினி/ டிடி
விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினி யாரென்றால் அனைவரும் கூறுவது டிடி தான். அதாவது திவ்யதர்ஷினியைத் தான். தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளர்களில் மிகவும் திவ்யதர்ஷினி. தொலைக்காட்சி மட்டுமில்லாமல் சர்வம் தாள மயம், சரோஜா, கோவா, பவர் பாண்டி உள்ளிட்ட படங்களிலும் நடித்துளளார். இளம் தொகுப்பாளினிகள் எவ்வளவோ பேர் வந்துவிட்ட போதிலும் டிடி-யின் இடத்தைப் பிடிக்க முடியவில்லை. மக்களால் மிகவும் விரும்பப்பட்ட டிவி பிரபலங்கள் பட்டியலில் இவர் 8-ம் இடத்தைப் பிடித்துள்ளார்.
கிகி விஜய்/ கீர்த்தி
நடிகர் ஷாந்தனுவின் மனைவி கீர்த்தி, மக்களால் கிகி விஜய் என்று செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறார். கீர்த்தி பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமானார். அதன் மூலம் தமிழக மக்களிடையே பிரபலமானார். தற்போது திரைப்படத்திலும் நடிக்க உள்ளார். தினமும் யூடியூப் வாயிலாக மக்களைச் சந்தித்து வருகிறார். கிகி இந்தப் பட்டியலில் 9-ம் இடம் பிடித்துள்ளார்.
.
சாந்தினி தமிழரசன்
நடிகை சாந்தினி தமிழில் மன்னர் வகையறா, வஞ்சகர் உலகம், பில்லா பாண்டி, ராஜா ரங்கூஸ்கி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். பின்னர் 2019 ஆம் ஆண்டில் தாழம்பூ சீரியல் மூலம் டிவியில் நுழைந்தார். தற்போது இரட்டை ரோஜா சீரியல் மூலம் மக்களிடம் பிரபலமாகியுள்ளார். சாந்தினி இந்தப் பட்டியலில் 10-ம் இடம் பிடித்துள்ளார்.
அஞ்சனா ரங்கன்
சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜே-வாக தனது பயணத்தைத் துவங்கினார் அஞ்சனா. 10 ஆண்டுகளாக சன்மியூசிக்கில் பணியாற்றி தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமாகியுள்ளார் அஞ்சனா. தற்போது லாக்டவுன் நேரத்தில் அசத்தல் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். அஞ்சா இந்தப் பட்டியலில் 11-ம் இடம் பிடித்துள்ளார்.
சைத்ரா ரெட்டி
யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக அறிமுகமானார் சைத்ரா. கடந்த ஆண்டு பூவ் பூச்சூட வா சீரியலிலும் காணப்பட்டார். தற்போது திரைப்படங்களில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இவருக்கு 12-ம் இடம்.
பிரியங்கா குமார்
பிரியங்கா சாக்லேட் நிகழ்ச்சி மூலமாக தமிழ் தொலைக்காட்சித் துறையில் நுழைந்தார். தற்போது காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து வருகிறார். ரசிகர்கள் மனதை வென்று இவர் பிடித்திருக்கும் இடம் 13.
வித்யா பிரதீப்
வித்யா பிரதீப் திரைப்படங்கள் மற்றும் சீரியல்கள் என ஒரே நேரத்தில் இரண்டு பகுதிகளிலும் கலக்கி வருகிறார். நாயகி சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். பல படங்களிலும் நடித்து வருகிறார். வித்யா பிரதீப் 14-ம் இடம் பிடித்துள்ளார்.
ஆஷா கவுடா
ஆஷா சிறிய திரையில் கோகுலத்தில் சீதை சீரியல் மூலமாக அறிமுகமானார். அதன் மூலம் ரசிகர்கள் மனதை வென்று இந்தப் பட்டியலில் 15-ம் இடம் பிடித்துள்ளார்.
ஷபானா ஷாஜகான்
சீரியலிகளில் மிகவும் பிரபலமானது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி. அதன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் ஷபானா. இவர் 16-ம் இடம் பிடித்துள்ளார்.
டெல்னா டேவிஸ்
49-ஓ மற்றும் குரங்கு பொம்மை ஆகிய படங்களில் நடித்துள்ள டெல்னாவுக்கு அந்தளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் அன்பே வா சீரியல் மூலம் தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமாகியுள்ளார். டெல்னா 17-ம் இடம் பிடித்துள்ளார்.
ஸ்ரேயா அஞ்சன்
கன்னட சீரியல்களில் அறிமுகமான ஸ்ரேயா இரண்டு படங்களிலும் திருமணம் மற்றும் அன்புடன் குஷி ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமானார் ஸ்ரேயா. அவருக்கு 18-ம் இடம்.
சம்யுக்தா
மாடல் அழகியான சம்யுக்தா பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொண்டு பிரபலமானார். இவர் சிறந்த ஸ்னோ டான்சர், உடற்பயிற்சி ஆர்வலர் என பன்முகத்திறமை கொண்டவர். அவருக்கு இந்தப் பட்டியலில் 19-ம் இடம்.
இமா பிந்து
இதயத்தைத் திருடாதே நிகழ்ச்சி மூலமாக பிரபலமான இமா பிந்து இந்தப் பட்டியலில் 20-ம் இடம் பிடித்துள்ளார்.

