”குடும்பத்துடன் வந்துடுங்க” ஸ்டார் திரைப்பட இயக்குநர் அழைப்பு

ஸ்டார்

லிப்ட், டாடா என வித்தியாசமான கதைக்களத்தில் நடித்து பிரபலமான சின்னத்திரை நடிகர் கவின், தற்போது நடித்துள்ள ஸ்டார் திரைப்படத்துக்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்டார் திரைப்படத்திலிருந்து புகைப்பட ஆல்பம் வெளியானது

நடன இயக்குநர் சதீஸ் இயக்கத்தில் கவின் புதிய படத்தில் நடித்து வருகிறார். அதே போல, பியார் பிரேமா காதல் பட இயக்குநர் இலனுடம் ஸ்டார் என்ற திரைப்படத்தில் நடித்துள்ள கவின், அப்படத்தின் வெளியீட்டுக்காக காத்துக்கொண்டிருக்கிறார். 

யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள ஸ்டார் திரைப்படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனை டிவிட்டரில் தெரிவித்துள்ள இயக்குநர் இலன், மே 10 ஆம் தேதி வெளியாக உள்ள ஸ்டார் படத்தை பார்க்க குடும்பத்துடன் வாருங்கள் என அழைப்பு விடுத்துள்ளார்.

“U” vaangiyaachu , family oda vaanga⭐️#STARMOVIE on MAY 10th ⭐️https://t.co/fN1oMLz0gr pic.twitter.com/nuxHIi3Oo8

— Elan (@elann_t) May 6, 2024கல்லூரி காதல் கதையாக உருவாகும் இப்படத்தில் லால், அதிதி போஹங்கர், ப்ரெய்ட்டி முகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.   

Share this story