"வடசென்னை 2 படத்துல சிம்புவா? தனுஷ் பணம் கேட்பது சரியானதுதான்"- இயக்குநர் வெற்றிமாறன்

"வடசென்னை 2 படத்துல சிம்புவா? தனுஷ் பணம் கேட்பது சரியானதுதான்"- இயக்குநர் வெற்றிமாறன்

தனுஷ் நடிப்பதுதான் வடசென்னை 2 ஆக இருக்கும். சிம்பு நடிப்பது வடசென்னை 2 இல்லை என இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.

'வடசென்னை 2'வுக்கு தனுஷ் கால்ஷீட் கொடுப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் அதே வடசென்னை பின்னணியில் சிம்புவை வெற்றிமாறன் இயக்குவதாகவும், இதனால் தனக்கு வெற்றிமாறன் 20 கோடி தரவேண்டும் என்று தனுஷ் கேட்டதால் வெற்றிமாறன், தனுஷ் இடையே பிரச்சனை வெடித்துள்ளதாகவும் தகவல் வெளியான நிலையில், வெற்றிமாறன் வீடியோ வாயிலாக விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக வெற்றிமாறன் வெளியிட்டுள்ள காணொலியில், “தனது அடுத்த படம் சிம்புவுடன் தான். ஆனால் அது வடசென்னை 2 அல்ல. அதே காலக்கட்டத்தில் நடக்கும் கதைக்களம். வடசென்னையில் உள்ள அம்சங்கள், கதாபாத்திரங்கள் இந்தக் கதையிலும் இருக்கும். ஆனால் இது வேறு மாதிரியான படம். அதைப்பற்றி தனுஷுடன் பேசியபோது, அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும், அதற்கு பணம் தேவை இல்லை என்றும் கூறினார்.  தனுஷ் நடிப்பதுதான் வடசென்னை 2 ஆக இருக்கும். சிம்பு நடிப்பது வடசென்னை 2 இல்லை.  தனுஷ்தான் 'வடசென்னை' பட தயாரிப்பாளர். அதனால் அவரின் COPYRIGHT காட்சியை மற்றவர் பயன்படுத்த பணம் கேட்பது சரியானதுதான். இதற்காக அவரை வில்லன் போல பார்க்கவேண்டிய அவசியமில்லை”  எனக் கூறியுள்ளார்.

Share this story