வெற்றிமாறன் படம் குறித்து ஆரி என்ன சொன்னாரு தெரியுமா ?

வெற்றிமாறன் படம் குறித்து ஆரி என்ன சொன்னாரு தெரியுமா ?

‘விடுதலை’ படத்தை பார்க்க ஒரு ரசிகனாக ஆவலுடன் காத்திருக்கிறேன் என நடிகர் ஆரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தலைச்சிறந்த இயக்குனராக மாறிவிட்டார் இயக்குனர் வெற்றிமாறன். தனது அடுத்தடுத்த படைப்புகளால் ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறார். கடைசியாக அவர் உருவாக்கிய ‘அசுரன்’ மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் சூரியை ஹீரோவாக வைத்து புதிய படத்தை உருவாக்கி வருகிறார். ‘விடுதலை’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சூரியுடன் இணைந்து விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

வெற்றிமாறன் படம் குறித்து ஆரி என்ன சொன்னாரு தெரியுமா ?

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த போஸ்டருக்கு பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன். சசிகுமார், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். இதற்கு நடிகர் சூரி, அனைவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே நெடுஞ்சாலை படத்தின் மூலம் ரசிகர்களிடையே அறிமுகமாக நடிகர் ஆரி, பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்துக்கொண்டு வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டு பிரபலமடைந்தார். இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கியுள்ள ‘விடுதலை’ படத்திற்கு தனது ட்விட்டரில் நடிகர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு பதிவில், இந்திய சினிமாவின் பெருமைமிகு இயக்குனர் வெற்றிமாறனின் அடுத்த படைப்பு விடுதலை. இது அதிகாரம், இனம், அரசியல் இதில் எதன் விடுதலையை பேசப் போகிறது? ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ஒரு ரசிகனாக… அனைவருக்கும் வாழ்த்துக்கள் என குறிபிட்டுள்ளார்.

Share this story