விஜய் பட ஹீரோயின் பூஜா ஹெக்டேவுக்கு கொரானா…

விஜய் பட ஹீரோயின் பூஜா ஹெக்டேவுக்கு கொரானா…

ஜார்ஜியாவில் விஜய்யுடன் ஷூட்டிங்கில் கலந்துகொண்டு வந்த நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கொரானா தொற்று உறுதியாகியுள்ளது.

விஜய் பட ஹீரோயின் பூஜா ஹெக்டேவுக்கு கொரானா…

உலகம் முழுவதும் கொரானா தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. நாளுக்குநாள் பரவி வரும் தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் அனைவரும் தவித்து வருகின்றனர். இந்தியாவில் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். பொதுமக்களை தொடர்ந்து சினிமா பிரபலங்களும் கொரானாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விஜய் பட ஹீரோயின் பூஜா ஹெக்டேவுக்கு கொரானா…

இதற்கிடையே விஜய் – நெல்சன் கூட்டணியில் புதிய படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் ஜார்ஜியாவில் நடைபெற்று வந்தது. 100 பேர் வரை கலந்துக்கொண்ட இந்த படத்தின் ஷூட்டிங் 16 நாட்கள் வரை நடைபெற்றது. இந்த ஷூட்டிங்கில் விஜய் – பூஜா ஹெக்டே இணைந்து நடிக்கும் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது.

இதையடுத்து இந்த படக்குழுவில் சிலருக்கு கொரானா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து படப்பிடிப்பை அவசர அவசரமாக முடித்து இன்று சென்னை திரும்பினார் நடிகர் விஜய். இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் நடித்த பூஜா ஹெக்டேவுக்கு கொரானா தொற்று உறுதியாகியுள்ளது. இது குறித்து தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், நான் கொரானா பரிசோதனை செய்ததில் தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து கொரானா வழிமுறைகளை பின்பற்றி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறேன். சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். நான் இப்பொழுது நலமாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Share this story