‘தளபதி 65’ படத்திற்காக வெளிநாடு பறக்கும் விஜய்… புதிய அப்டேட் வெளியானது…

‘தளபதி 65’ படத்திற்காக வெளிநாடு பறக்கும் விஜய்… புதிய அப்டேட் வெளியானது…

தளபதி 65வது படத்திற்காக விஜய் வெளிநாடு செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘தளபதி 65’ படத்திற்காக வெளிநாடு பறக்கும் விஜய்… புதிய அப்டேட் வெளியானது…

விஜய் – நெல்சன் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை பெரிய பட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. விஜய்யிக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் அபர்ணா தாஸ், கவின், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார்.

‘தளபதி 65’ படத்திற்காக வெளிநாடு பறக்கும் விஜய்… புதிய அப்டேட் வெளியானது…

ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணியாற்றும் இப்படத்திற்கு அன்பறிவ் சகோதரர்கள் ஸ்டண்ட் பணிகளை கவனிக்கின்றனர். ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வந்த இந்த படத்தின் ஷூட்டிங்கை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. உலக நாடுகளில் கொரானா தொற்று அதிகமாக பரவி வருவதால், பிரச்சனையில்லாத இடத்தில் ஷூட்டிங்கை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

‘தளபதி 65’ படத்திற்காக வெளிநாடு பறக்கும் விஜய்… புதிய அப்டேட் வெளியானது…

இந்த படம் உலக தரத்திலான படமாக உருவாக உள்ளதால், அதற்கான பணிகளில் நெல்சன் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் முதலில் காஷ்ரில் சில காட்சிகளை எடுக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அங்கு ஷூட்டிங்கு சென்றால் சிக்கல் ஏற்படலாம் என்பதால் பிளானை மாற்றியுள்ளனர். அதனால் பனிக்கட்டிகளிடையே காட்சிகளை படமாக்க விஜய் மற்றும் படக்குழுவினர் ஜார்ஜியா நாட்டிற்கு நாளை இரவு செல்ல உள்ளனர். இந்த முதற்கட்ட ஷூட்டிங் ஒரு மாதம் வரை நடைபெறும் என கூறப்படுகிறது.

Share this story