‘விஜய் 66’ பணிகளை தொடங்கிய இயக்குனர்… புதிய படத்தின் சூப்பர் அப்டேட்

‘விஜய் 66’ பணிகளை தொடங்கிய இயக்குனர்… புதிய படத்தின் சூப்பர் அப்டேட்

விஜய் அடுத்து நடிக்க இருக்கும் படத்தின் பணிகளை இயக்குனர் வம்ஷி தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘விஜய் 66’ பணிகளை தொடங்கிய இயக்குனர்… புதிய படத்தின் சூப்பர் அப்டேட்

நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் படத்தில் நடித்து வருகிறார். பெயரிடப்படாத இப்படத்தை பெரிய பட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் முதற்கட்டமாக ஜார்ஜியாவில் 16 நாட்கள் நடைபெற்றது. அதன்பிறகு சென்னையில் இரண்டாம் கட்ட ஷூட்டிங் துவங்குவதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. ஆனால் கொரானா தாக்கம் அதிகரித்து வருவதால் ஜூன் மாதத்தில் தொடங்கலாம் என படக்குழு முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

‘விஜய் 66’ பணிகளை தொடங்கிய இயக்குனர்… புதிய படத்தின் சூப்பர் அப்டேட்

விஜய்யின் 65வது படத்தின் பணிகளே இன்னும் முடியாத நிலையில் அடுத்த படத்தின் அப்டேட்டுகள் வர தொடங்கிவிட்டன. விஜய்யின் 66வது படத்தை இயக்குவதில் பல இயக்குனர்களிடையே கடும் போட்டி இருந்தது. முதலில் ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் சில காரணங்கள் இந்த படத்திலிருந்து விலகிவிட்டார். இதையடுத்து அட்லி, லோகேஷ் கனகராஜ் ஆகிய இருவரில் ஒருவர் இயக்குவதாக பேச்சு அடிப்பட்டது. ஆனால் லோகேஷ் கனகராஜ் கமலுடன் இணைந்து விக்ரம் படத்தை ஆரம்பித்துவிட்டார். அட்லியும் ஷாரூக்கான் படத்தை ஆரம்பிப்பதற்கான பணிகளில் மும்மரமாக உள்ளார்.

‘விஜய் 66’ பணிகளை தொடங்கிய இயக்குனர்… புதிய படத்தின் சூப்பர் அப்டேட்

இந்த சூழ்நிலையில் விஜய்யின் 66வது படத்தை இயக்குவது பிரபல தெலுங்கு இயக்குனர் வம்ஷி படைப்பள்ளி என உறுதியான தகவல் வெளியானது. இயக்குனர் வம்ஷி, தமிழில் கார்த்தியின் நடிப்பில் வெளியான ‘தோழா’, மகேஷ் பாபுவின் ‘மகரிஷி’ உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கியவர். இவர் விஜய்க்காக ஒரு புதிய கதையை எழுதி வைத்துள்ளதாகவும், அதன் ஒன் லைனை விஜய்யிடம் சொல்லி ஒப்புதல் வாங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கவுள்ளார். இந்நிலையில் இயக்குனர் வம்ஷி, விஜய்யின் 66வது படத்தின் ஸ்கிரிப் வேலைகளை தொடங்கிவிட்டதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 2022 ஜனவரியில் தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share this story