"பிரபலம் ஆகிவிட்டேன் என்பதற்காக நான் அரசியலுக்கு வர முடியாது"- விஜய் ஆண்டனி

நடிகர்கள் நாடாளக்கூடாது என்பது விதியல்ல, மக்கள் ஆதரவு இருந்தால் ஆளலாம் என நடிகர் விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய இசையமைப்பாளரும், நடிகரும் விஜய் ஆண்டனி, “பிரபலம் ஆகிவிட்டேன் என்பதற்காக நான் அரசியலுக்கு வர முடியாது. எனக்கு அரசியல் அறிவு கிடையாது. 50 வயது ஆகிவிட்டது. இனிமேல் அதை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் இல்லை, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அரசியல் வடிவில் அதை செய்யும் எண்ணம் எனக்கு இல்லை. நடிகர்கள் நாடாளக்கூடாது என்பது விதியல்ல, மக்கள் ஆதரவு இருந்தால் ஆளலாம்.
சினிமாவில் போதைப்பொருள் பயன்பாடு நீண்ட காலமாகவே நிலவுவது உண்மை தான் புகை பிடிப்பதும் போதைப் பழக்கம்தான். அதன் அடுத்த கட்டம்தான் போதைப்பொருள் பழக்கம். ஸ்ரீகாந்த் இப்போது விசாரணையில் இருக்கிறார். இன்னும் முழு உண்மை தெரியவில்லை” என்றார்.