சிறந்த நடிகைக்கான விகடன் விருதை பெற்ற சாய் பல்லவி... தடம் பதித்த சூரியின் திரைப்படம்

லப்பர்பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவுக்கு சிறந்த இயக்குநருக்கான விகடன் சினிமா விருது கிடைத்துள்ளது. அதேபோல் சிறந்த குணச்சித்திர நடிகையாக லப்பர் பந்து படத்தில் நடித்த ஸ்வாஸ்விகா பெற்றுள்ளார். சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருது போகுமிடம் வெகுதூரமில்லை படத்தில் நடித்ததற்காக கருணாஸ்க்கு கிடைத்துள்ளது. சிறந்த அறிமுக நடிகையாக லவ்வர் படத்தில் நடித்த ஸ்ரீகௌரி ப்ரியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த அறிமுக நடிகராக ஜமா படத்தில் நடித்த பாரி இளவழகனுக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த கலை இயக்கத்துக்கான விகடன் சினிமா விருது விடுதலை பாகம்-2 படத்தில் பணியாற்றிய ஜாக்கிக்கு வழங்கப்பட்டது.
சிறந்த நடனம் - சாண்டி (மினிக்கி மினிக்கி, மக்காமிஷி)
சிறந்த சண்டைப்பயிற்சி - அன்பறிவ், ஸ்டெஃபன் ரிக்டர் (அமரன்)
சிறந்த படத்தொகுப்பு - பிலோமின் ராஜ் (மகாராஜா, பிளாக்)
சிறந்த ஒளிப்பதிவு - தேனி ஈஸ்வர் (வாழை)
சிறந்த கதை - இரா.சரவணன் (நந்தன்)
சிறந்த வசனம் - கவிஞர் தய்.கந்தசாமி, மணிமாறன், வெற்றிமாறன் (விடுதலை பாகம்-2)
சிறந்த திரைக்கதை - நித்திலன் சாமிநாதன் (மகாராஜா)
சிறந்த இசையமைப்பாளர் (பாடல்கள்) - ஷான் ரோல்டன் (லவ்வர், லப்பர் பந்து)
சிறந்த இசையமைப்பாளர் (பின்னணி இசை) - ஜி.வி. பிரகாஷ் குமார் (கேப்டன் மில்லர், தங்கலான், அமரன்)
சிறந்த தயாரிப்பு - கொட்டுக்காளி (சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்)
சிறந்த இயக்குநர்- மாரி செல்வராஜ் (வாழை)
சிறந்த குழந்தை நட்சத்திரம் - பொன்வேல் (வாழை)
சிறந்த நடிகையாக அமரன் படத்தில் நடித்த சாய் பல்லவிக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த படமாக கொட்டுக்காளி தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நடிகராக விஜய் சேதுபதி (விடுதலை பாகம்-2, மகாராஜா) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.