கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் விவேக் நடிக்கும் ரிவோல்வர் ரிச்சர்ட்!

கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் விவேக் நடிக்கும் ரிவோல்வர் ரிச்சர்ட்!

நடிகர் விவேக் சமீபத்தில் இங்கிலீஸ்காரரைப் போல கோர்ட் சூட் அணிந்து வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் பயங்கர வைரலானது. கொரோனா லாக்டவுன் நாட்களில் சினிமாவில் வாய்ப்பில்லாத நடிகைகள் பலரும் போட்டோஷூட் நடத்தி அதனை தங்கள் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு பட வாய்ப்புகளை தேடி வந்தனர்.சிலர் டைம் பாஸ்சிற்காக போட்டோக்களை வெளியிட்டு வந்தனர்.

அந்த வகையில் நடிகர் விவேக்கும் ஃபுல் ஒயிட் அண்ட் ஒயிட் மற்றும் பிளாக் அண்ட் ப்ளாக்கில் காம்பினேஷனில் போட்டோஷூட் நடத்தி சோசியல் மீடியாக்களில் வெளியிட்டார். அவை நல்ல வரவேற்பு பெற்றன.

கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் விவேக் நடிக்கும் ரிவோல்வர் ரிச்சர்ட்!

இந்நிலையில் கவுதம் மேனன் இயக்கத்தில் ,ரிவோல்வர் ரிச்சர்ட் என்ற டைடலில் நடிகர் விவேக் ஹீரோவாக நடித்திருப்பதைப் போன்ற போஸ்டர் ஒன்றை விவேக்கின் தீவிர ரசிகர் ஒருவர் எடிட் செய்து வெளியிட்டுள்ளார்.

கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் விவேக் நடிக்கும் ரிவோல்வர் ரிச்சர்ட்!

இந்த போஸ்ட்டரை இயக்குனர் கவுதம் மேனனே நடிகர் விவேக்கிற்கு ட்வீட் செய்துள்ளார். அதனை பார்த்து நெகிழ்ந்துப் போன விவேக், இதனை எடிட் செய்தது யார் என்று தெரியவில்லை, ஆனால் அவர் என் மீது வைத்திருக்கும் அன்பு எனக்கு நன்றாக தெரிகிறது என ட்வீட் செய்துள்ளார்.

Share this story