அனிருத்துக்கும் காவியா மாறனுக்கும் விரைவில் திருமணம்?

s

பிரபல இசையமைப்பளராக அனிருத், ஐபிஎல் தொடரில் விளையாடும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவியா மாறனை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. 

தமிழ் இசை ரசிகர்களால், ‘ராக் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் அனிருத். இவர்  பிரபல துணை நடிகர் ரவி ராகவேந்திராவின் மகன் ஆவார். ஒரு வகையில், நடிகர் ரஜினிகாந்திற்கு சொந்தமாகும். 16 வயதிலேயே திரையுலகில் நுழைந்தவர். 3 படம் மூலம் அறிமுகமான இவர், இன்று  பாலிவுட் வரை சென்று, இந்திய இசையுலகில் அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்களுள் ஒருவராக வலம் வருகிறார். ரஜினி, கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத், ஜவான் படம் மூலம் இந்தி திரையுலகிலும், தேவரா படம் மூலம் தெலுங்கு திரையுலகிலும் அறிமுகமனார்.

தற்போது கூலி, மதராஸி, ஜன நாயகன், ஜெயிலர் 2 உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத், ஐபிஎல் தொடரில் விளையாடும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உரிமையாளரும், சன் நெட்வொர்க் உரிமையாளர் கலாநிதி மாறனின் மகளுமான காவியா மாறனை நீண்ட காலமாக காதலித்து வருவதாகவும், இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. 

Share this story