அன்று நான் செய்தேன் இன்று சூர்யா செய்கிறார்: சிவகுமார் பெருமிதம்..!

1

சூர்யா பற்றி பெருமையாக பேசியிருக்கிறார் சிவகுமார்.

பேட்டி ஒன்றில் சிவகுமார் கூறியதாவது, ஒரு காலத்தில் நான் குடும்பத்தை வழி நடத்தினேன். சூர்யாவை படிக்க வைத்தேன். அவர் படித்து முடித்து ஒரு இடத்தில் வேலைக்கு சேர்ந்தார். அதன் பிறகு ஹீரோ ஆனார் சூர்யா.
பல ஆண்டுகளாக நான் குடும்பத்தை கவனித்துக் கொண்ட நிலையில் தற்போது சூர்யா தான் வழி நடத்துகிறார். அவர் வழி நடத்துதலின்படி நாங்கள் செல்கிறோம் என்றார்.சூர்யா நல்ல நடிகர் மட்டும் அல்ல நல்ல மகன், நல்ல அண்ணன், நல்ல கணவர், நல்ல அப்பா ஆவார். இந்நிலையில் சூர்யாவை பற்றி சிவகுமார் அப்படி சொன்னதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

தன் கெரியர் மட்டும் நல்லா இருந்தால் போதும் என சுயநலமாக நினைக்காதவர் சூர்யா. தம்பி கார்த்தியின் கெரியரும் சூப்பராக இருக்க உதவி செய்து வருகிறார். மேலும் குழந்தைகள் வந்த பிறகு நடிப்பில் இருந்து பிரேக் எடுத்த காதல் மனைவி ஜோதிகாவின் செகண்ட் இன்னிங்ஸ் வெற்றிகரமாக செல்ல முக்கிய காரணமாக இருந்து வருகிறார் சூர்யா.

சூர்யா தன் மனைவியுடன் செஷல்ஸுக்கு வெகேஷனுக்கு சென்றிருக்கிறார். அங்கு எடுத்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்திருக்கிறார் ஜோதிகா. அதை பார்த்த ரசிகர்களோ, இந்த ஜோடிக்கு திருமணமாகி எத்தனை ஆண்டுகளானாலும் காதல் மட்டும் குறையவே இல்லை. சொல்லப் போனால் ஆண்டுகள் செல்லச் செல்ல சூர்யா, ஜோதிகா இடையேயான காதல் கூடிக் கொண்டே தான் போகிறது என்கிறார்கள்.
 

கெரியரை பொறுத்தவரை கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ரெட்ரோ படம் மே 1ம் தேதி திரைக்கு வந்து வெற்றி பெற்றது. இதையடுத்து ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் கருப்பு படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சூர்யா. கருப்பு படம் மூலம் பல ஆண்டுகள் கழித்து சூர்யாவும், த்ரிஷா கிருஷ்ணனும் சேர்ந்து நடித்திருக்கிறார்கள். கருப்பு பட ஷூட்டிங் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. கருப்பு பட வேலையை முடித்ததும் வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா 46 பட வேலையை துவங்கிவிட்டார். அந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்கிறார்.

சூர்யா 46 ஒரு குடும்ப படமாக உருவாகி வருவதாக தெரிவித்துள்ளார் வெங்கி அட்லுரி. தற்போது குடும்ப படங்களுக்கு ரசிகர்கள் இடையே அதிக வரவேற்பு இருக்கும் நிலையில் சூர்யா படம் நிச்சயம் பெரிய அளவில் வெற்றி பெறும் என நம்பப்படுகிறது. வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடிப்பது இதுவே முதல் முறையாகும். தெலுங்கு சினிமாவில் வெற்றிகரமான இயக்குநராக இருந்து வரும் வெங்கி அட்லுரி சூர்யாவுக்கும் ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுப்பார் என ரசிகர்கள் நம்புகிறார்கள். மேலும் தெலுங்கு இயக்குநர்கள் தமிழ் நடிகர்களை வைத்து நிச்சயம் நல்ல படங்களை தான் கொடுப்பார்கள் என்பது தமிழ் சினிமா ரசிகர்களின் நம்பிக்கை ஆகும்.

Share this story