என்னது... பிரபாஸ் நடிக்கும் படத்தின் நீளம் மூன்றரை மணி நேரமா..?

1
மாருதி இயக்கி பிரபாஸ் நடித்துள்ள ''தி ராஜாசாப்'' படத்தின் டீசர் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.இந்த ஹாரர் காமெடி திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி மிகப்பெரிய அளவில் வெளியாக உள்ளது.

டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் மாருதி,  இப்படம் மூன்றரை மணி நேரம் நீளமாக இருக்கும் என்று கூறினார். இது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது.

இந்நிலையில், படத்தின் நீளம் மூன்றரை மணி நேரம் என்று தவறாக கூறிவிட்டதாகவும், படம் சுமார் மூன்று மணி நேரம் நீளமாக இருக்கும் என்றும் இயக்குனர் தற்காலிக ரன் டைமை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் ரிலீஸ் தேதி நெருங்கும்போது சிறிய மாற்றங்கள் ஏற்படலாம்.

Share this story