யஷ் நடிக்கும் ‘டாக்சிக்’ படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பம்
‘கே ஜி எஃப்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு பான் இந்திய நட்சத்திர நடிகராக உயர்ந்த நடிகர் யஷ் கதையின் நாயகனாக நடிக்கும் ‘டாக்சிக் ‘ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி இருக்கிறது.
நடிகையும் இயக்குநருமான கீது மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘டாக்சிக்’ எனும் திரைப்படத்தில் நடிகர் யஷ் கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் பெங்களூரூவில் தொடங்குகிறது. இதற்காக கர்நாடகாவில் உள்ள ஆலயம் ஒன்றில் பட குழுவினர் ஒன்று கூடி பிரார்த்தித்தனர். இது தொடர்பான புகைப்படத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த திரைப்படத்தை கே வி என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ‘கே ஜி எஃப்’ புகழ் யஷ் நடிக்கும் படத்தின் புதிய தகவல்கள் வெளியாகி இருப்பதால் அவருடைய ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகிறார்கள்.
A new chapter begins for a tale to witness 🔥#ToxicShootBegins today with an auspicious pooja ceremony 🪔
— TOXIC (@Toxic_themovie) August 8, 2024
Here are some magical moments 📸@TheNameIsYash #TOXICTheMovie #GeetuMohandas @KVNProductions@Toxic_themovie pic.twitter.com/rsgXaGS8H7