தனுஷுடன் மீண்டும் ஜோடிப்போடும் நடிகை.. ‘நானே வருவேன்’ அப்டேட்

தனுஷுடன் மீண்டும் ஜோடிப்போடும் நடிகை.. ‘நானே வருவேன்’ அப்டேட்

3வது முறையாக நடிகர் தனுஷுடன் தமன்னா நடிக்கவுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷுடன் மீண்டும் ஜோடிப்போடும் நடிகை.. ‘நானே வருவேன்’ அப்டேட்

காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன படங்களை அடுத்து செல்வராகவன்-தனுஷ் கூட்டணி இணையும் படம் நானே வருவேன். இந்த கூட்டணியில் செல்வராகவனுக்கு இசையில் பேவரிட்டாக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா.

தனுஷுடன் மீண்டும் ஜோடிப்போடும் நடிகை.. ‘நானே வருவேன்’ அப்டேட்

தனுஷ்-செல்வராகவன்- யுவன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு கூடியுள்ளது. கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை அரவிந்த் கிருஷ்ணா கவனிக்கிறார்.

தனுஷுடன் மீண்டும் ஜோடிப்போடும் நடிகை.. ‘நானே வருவேன்’ அப்டேட்
Simha Putrudu Movie Stills

இந்நிலையில் இப்படத்தின் முதற்கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நானே வருவேன் என பெயரிடப்பட்டுள்ள இரு போஸ்டர்களை நேற்று முன்தினம் இயக்குனர் செல்வராகவன் வெளியிட்டார்.

தனுஷுடன் மீண்டும் ஜோடிப்போடும் நடிகை.. ‘நானே வருவேன்’ அப்டேட்

இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனுஷுக்கு ஜோடியாக இரு கதாநாயகிகள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் முதல் நாயகியாக தமன்னா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நடிகை தமன்னா, படிக்காதவன், வேங்கை படங்களில் தனுஷுடன் நடித்துள்ளார். தற்போது மூன்றாவது முறையாக இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story