7 கெட்டப்புகளில் கலக்கும் ‘விக்ரம்’ – தெறிக்கவிடும் டீசர்…

7 கெட்டப்புகளில் கலக்கும் ‘விக்ரம்’  – தெறிக்கவிடும் டீசர்…

7 கெட்டப்புகளில் கணித ஆசிரியராக நடிக்கும் விக்ரமின் கோப்ரா படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் விக்ரம் ‘கடாரம் கொண்டான்’ திரைப்படத்தை அடுத்து கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இந்த படத்தை இயக்குகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகிறது.

7 கெட்டப்புகளில் கலக்கும் ‘விக்ரம்’  – தெறிக்கவிடும் டீசர்…

இத்திரைப்படத்தில் கேஜிஎப் படத்தின் ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கிறார். முதல்முறையாக கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் வில்லனாக அறிமுகமாகிறார். கடந்த பிப்ரவரி மாதத்தில் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் 7 கெட்டப்புகளில் விக்ரம் காட்சியளித்திருந்தார்.

7 கெட்டப்புகளில் கலக்கும் ‘விக்ரம்’  – தெறிக்கவிடும் டீசர்…

இந்நிலையில் கோப்ரா படத்தின் டீசர் படக்குழுவால் வெளியிடப்பட்டது. அதிரடி, ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்திருக்கும் டீசரில் கணித கோட்பாடுகளை பயன்படுத்தி குற்றம் செய்பவராக நடித்து அசத்தியிருக்கிறார் விக்ரம். அவருக்கு வில்லனாக தோன்றியுள்ளார் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான். இந்த கோப்ரா டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Share this story