’கோப்ரா’ படத்திலிருந்து விக்ரமின் புதிய லுக் வெளியீடு…

’கோப்ரா’ படத்திலிருந்து விக்ரமின் புதிய லுக் வெளியீடு…

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் ‘கோப்ரா’. இதில் கே.ஜி.எஃப் பட புகழ் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி இர்பான் பதான், ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ், கே.எஸ்.ரவிகுமார், மிருணாளினி உள்ளிட்ட பலர் விக்ரமுடன் நடித்து வருகிறார்கள்.

’கோப்ரா’ படத்திலிருந்து விக்ரமின் புதிய லுக் வெளியீடு…

இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளராக ஹரிஷ் கண்ணன், எடிட்டராக புவன் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ லலித் குமார் தயாரித்து வருகிறார்.

இந்தப்படத்தில் நடிகர் விக்ரம் பல கெட்டப்களில் நடித்து வருகிறார். அவரது பல கெட்டப்கள் அடங்கிய போஸ்டர் ஏற்கெனவே வெளியானது. அதோடு கோப்ரா படத்தில் இடம்பெற்றுள்ள ‘தும்பி துள்ளல்’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது கொல்கத்தாவில் ‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

’கோப்ரா’ படத்திலிருந்து விக்ரமின் புதிய லுக் வெளியீடு…

இந்நிலையில் இன்று (டிசம்பர் 25) கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, ‘கோப்ரா’ படத்தின் புதிய போஸ்டர் வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. அதன்படி, விக்ரமின் புதிய கெட்டப் கொண்ட போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. அந்த போஸ்டருக்கு கேப்ஷனாக “ஒவ்வொரு பிரச்சினைக்கும் கணித ரீதியான தீர்வும் உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது படக்குழு.

Share this story