லாபம் படத்தின் பாடலுக்காக தமிழ் ஈழத்தைச் சேர்ந்த ராப் பாடகியை வரவைத்த டி.இமான்!

லாபம் படத்தின் பாடலுக்காக தமிழ் ஈழத்தைச் சேர்ந்த ராப் பாடகியை வரவைத்த டி.இமான்!

விஜய் சேதுபதி நடிக்கும் லாபம் படத்தின் பாடலூக்காக இசையமைப்பாளர் இமான் தமிழ் ஈழத்தைச் சேர்ந்த ராப்பர் பாடகி ஒருவரை வரவைத்துள்ளார் .

ஈ, பேராண்மை படங்களை இயக்கிய எஸ்பி. ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ‘லாபம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார். விவசாயிகள் பிரச்சனை குறித்து படம் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. தற்போது படத்தின் வேலைகள் மும்மரமாக நடந்து வருகிறது.

Image

இசைமைப்பாளர் டி.இமான் லாபம் படத்திற்கு இசையமைத்து வருகிறார். தற்போது தமிழ் ஈழத்தைச் சேர்ந்த ராப்பர் பாடகி ஒருவரை லாபம் படத்தில் பாட வைக்க இருப்பதாக இமான் தெரிவித்துள்ளார்.

Image

“எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதிஹாசன் நடிக்கும் லாபம் படத்தின் ஒரு எனெர்ஜிடிக் பாடலுக்காக சுவிட்சர்லாந்தில் இருந்து “CLEO VII”-வைச் சேர்ந்த தமிழ் ஈழ ராப்பரை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி.” என்று தெரிவித்துள்ளார்.

இமானின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

Share this story