பூஜையுடன் தொடங்கிய ‘D43’ தனுஷ் – கார்த்திக் நரேன் கூட்டணியில் உருவாகிறது…

பூஜையுடன் தொடங்கிய ‘D43’    தனுஷ் – கார்த்திக் நரேன் கூட்டணியில் உருவாகிறது…

தனுஷ் – கார்த்திக் நரேன் கூட்டணியில் புதிய படத்தின் பூஜை இன்று தொடங்கியது.

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பம்பரமாய் சுழன்று வருகிறார் நடிகர் தனுஷ். தற்போது கார்த்திக் சுப்புராஜின் ’ஜகமே தந்திரம்’, மாரி செல்வராஜின் ’கர்ணன்’, ஆனந்த் எல் ராயின் ’அத்ரங்கி ரே’ போன்ற படங்கள் நடித்து ரிலீசுக்கு தயாராக இருக்கின்றனர்.

பூஜையுடன் தொடங்கிய ‘D43’    தனுஷ் – கார்த்திக் நரேன் கூட்டணியில் உருவாகிறது…

இதையடுத்து ’துருவங்கள் பதினாறு’ பட இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். தனுஷ் நடிக்கும் இந்த படத்தின் பூஜை இன்று தொடங்கியது.

பூஜையுடன் தொடங்கிய ‘D43’    தனுஷ் – கார்த்திக் நரேன் கூட்டணியில் உருவாகிறது…

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் நடிக்க உள்ளார். மேலும் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

பூஜையுடன் தொடங்கிய ‘D43’    தனுஷ் – கார்த்திக் நரேன் கூட்டணியில் உருவாகிறது…


சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். அதேபோல் பிரபல பாடலாசிரியர் விவேக் இப்படத்தில் கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதி உள்ளார்.

Share this story