தனுஷ் படத்தில் தடம் பட நடிகை.. ஆரம்பக்கட்ட பணியில் ‘துருவங்கள் பதினாறு’

தனுஷ் படத்தில் தடம் பட நடிகை..  ஆரம்பக்கட்ட பணியில்            ‘துருவங்கள் பதினாறு’

தனுஷ் நடிக்கும் ‘துருவங்கள் பதினாறு’ படத்தில் தடம் பட நடிகை இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் படத்தில் தடம் பட நடிகை..  ஆரம்பக்கட்ட பணியில்            ‘துருவங்கள் பதினாறு’

வட சென்னை, அசுரன் படங்களுக்குப் பிறகு தமிழில் தனுஷின் மார்க்கெட் வேற லெவலுக்கு உயர்ந்துவிட்டது. இதையடுத்து கார்த்திக் சுப்புராஜின் ஜகமே தந்திரம், ஆனந்த் எல் ராயின் அத்ரங்கி ரே ஆகிய படங்களை நடித்து முடித்துள்ளார் தனுஷ். இதைத்தொடர்ந்து செல்வராகவன் படம், பாலிவுட், ஹாலிவுட் என படு பிசியாகவும் உள்ளார்.

தனுஷ் படத்தில் தடம் பட நடிகை..  ஆரம்பக்கட்ட பணியில்            ‘துருவங்கள் பதினாறு’

இதனிடையே துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க மாளவிகா மோகனன் ஒப்பந்தமாகி உள்ளார். இந்நிலையில் ஸ்மிருதி வெங்கட் இப்படத்தில் இணைந்திருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஸ்மிருதி வெங்கட் இதற்கு முன் தடம், மௌன வலை, மூக்குத்தி அம்மன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தனுஷ் படத்தில் தடம் பட நடிகை..  ஆரம்பக்கட்ட பணியில்            ‘துருவங்கள் பதினாறு’

இப்படத்திற்கான ஆரம்பக் கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். விரைவில் ?-ஃப்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.   

Share this story