D43-யில் முதல் பாடலை முடித்த ‘தனுஷ்’… ‘ரௌடி பேபி’ டான்ஸ் மாஸ்டர் ட்விட்டரில் தகவல்!

D43-யில் முதல் பாடலை முடித்த ‘தனுஷ்’… ‘ரௌடி பேபி’ டான்ஸ் மாஸ்டர் ட்விட்டரில் தகவல்!

தனுஷ்ஷின் D43 படத்தின் முதல் பாடல் பதிவு முடிந்துவிட்டதாக பிரபல நடன இயக்குனர் ஜானி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

D43-யில் முதல் பாடலை முடித்த ‘தனுஷ்’… ‘ரௌடி பேபி’ டான்ஸ் மாஸ்டர் ட்விட்டரில் தகவல்!

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ்ஷின் D43 படம் தயாராகி வருகிறது. தலைப்பு இடப்படாத இப்படம் த்ரில்லர் படமாக உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தனுஷ்-க்கு ஜோடியாக மாளவிகா மோகன், சமுத்திரகனி உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கவுள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.

D43-யில் முதல் பாடலை முடித்த ‘தனுஷ்’… ‘ரௌடி பேபி’ டான்ஸ் மாஸ்டர் ட்விட்டரில் தகவல்!

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பாடல் காட்சிகளை படமாக்க படக்குழு முடிவு செய்தது. அதன்படி படத்தின் முதல் பாடல் முடிந்துள்ளதாக பிரபல நடன இயக்குனர் ஜானி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இவர் ஏற்கனவே தனுஷ்-க்கு மாரி 2 படத்தில் மாபெரும் ஹிட் அடித்த ரௌடி பேபி பாடலுக்கு பிரபுதேவாவுடன் இணைந்து ஜானி நடன இயக்குனராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இப்படத்தின் பெயர் விரைவில் வெளியாகும் சமீபத்தில்தான் படக்குழு அறிவித்திருந்தது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share this story