மலையாளத்தில் ‘கர்ணனை’ கைப்பற்றிய மோகன்லால்…

மலையாளத்தில் ‘கர்ணனை’ கைப்பற்றிய மோகன்லால்…

தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள ‘கர்ணன்’ படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை நடிகர் மோகன்லாலின் நிறுவனம் பெற்றுள்ளது.

மலையாளத்தில் ‘கர்ணனை’ கைப்பற்றிய மோகன்லால்…

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையின் இன்னல்களை நம் கண்முன்னே தத்ரூபமாக காட்சிகளாக பிரதிபலிக்க இருக்கிற திரைப்படம் ‘கர்ணன்’. தனுஷின் இயல்பான நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். இவர்களுடன் கௌரி கிஷன், லால், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மலையாளத்தில் ‘கர்ணனை’ கைப்பற்றிய மோகன்லால்…

கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் நான்கு பாடல்கள் வெளியாகியுள்ளன. இதில் ‘கண்ட வரசொல்லுங்க’ பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வரும் ஏப்ரல் 9ம் தேதி வெளியாகும்‌‌ என அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் சென்சார் போர்டு வழங்கியுள்ளது.

மலையாளத்தில் ‘கர்ணனை’ கைப்பற்றிய மோகன்லால்…

இந்நிலையில் தமிழில் வெளியாகும் முக்கியமான படங்கள் கேரளாவிலும் நல்ல வரவேற்பை பெறுகின்றன. அதுபோன்ற படங்களை நடிகர் மோகன்லாலின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இதேபோன்று கடந்த 2019ம் ஆண்டு வெளியான தனுஷின் ‘அசுரன்’ படத்தையும் இந்த நிறுவனம்தான் வெளியிட்டது. அந்தவகையில் தற்போது ‘கர்ணன்’ படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை இந்நிறுவனம் பெற்றுள்ளது. எனவே கேரளாவிலும் ‘கர்ணன்’ திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியாவதில் எந்த சந்தேகமும் இல்லை.

Share this story