சர்வதேச திரைப்பட விழாவிற்கு ‘அசுரன்’ தேர்வு- தனுஷ் நெகிழ்ச்சி பதிவு…

சர்வதேச திரைப்பட விழாவிற்கு ‘அசுரன்’ தேர்வு- தனுஷ் நெகிழ்ச்சி பதிவு…

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடத்தப்படும். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடத்தப்படவில்லை. இதனால் 51-வது கோவா சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 16-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச திரைப்பட விழாவிற்கு ‘அசுரன்’ தேர்வு- தனுஷ் நெகிழ்ச்சி பதிவு…

இந்த ஆண்டு கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடத் தமிழிலிருந்து 2 படங்கள் தேர்வாகியுள்ளன. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன்’ திரைப்படம், வெகுஜன திரைப்படப் பிரிவில் திரையிடப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து கணேஷ் விநாயகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தேன்’ திரைப்படமும் திரையிடப்படவுள்ளது.சர்வதேச திரைப்பட விழாவிற்கு ‘அசுரன்’ தேர்வு- தனுஷ் நெகிழ்ச்சி பதிவு…

‘அசுரன்’ மற்றும் ‘தேன்’ ஆகிய படக்குழுவினருக்குத் தமிழ்த் திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், தான் நடித்த ‘அசுரன்’ படம் தேர்வாகி இருப்பது குறித்து தனுஷ் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“IFFI 2020 இந்தியப் பிரிவில் ‘அசுரன்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்படத்தின் உருவாக்கத்தில் பங்குபெற்ற எங்கள் அனைவருக்கும் இது ஒரு கவுரவம். மக்களுக்கான ஒரு படத்தைத் தேர்வு செய்தமைக்கு நன்றி”. என்று குறிப்பிட்டுள்ளார்.

Share this story