காதலியைக் கரம் பிடித்த கர்ணன் பட எடிட்டர்!

காதலியைக் கரம் பிடித்த கர்ணன் பட எடிட்டர்!

பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட படங்களில் தொகுப்பாளராகப் பணியாற்றிய ஆர்.கே செல்வாவிற்கு இன்று திருமணம் முடிந்துள்ளது.

இந்தத் தீபாவளி ஆர்.கே செல்வாவிற்கு சிறப்பாக அமைந்துள்ளது. ஏனெனில் அவர் எடிட்டராகப் பணியாற்றிய மூக்குத்தி அம்மன் மற்றும் பிஸ்கோத் என இரு படங்கள் வெளியாகியுள்ளன.

காதலியைக் கரம் பிடித்த கர்ணன் பட எடிட்டர்!

ஆர்.கே செல்வா இவன் தந்திரன், பூமராங், காலகூத்து, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, எல்.கே.ஜி, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல படங்களில் எடிட்டராக பணியாற்றியுள்ளார்.

காதலியைக் கரம் பிடித்த கர்ணன் பட எடிட்டர்!

ஆர்.கே செல்வாவிற்கு இன்று யோகா ஆர்வலரான அனிதா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தனது மனைவி உடனான புகைப்படங்களைப் பகிர்ந்துகொண்ட செல்வா, “இது 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்தது. நான் கீழே தளர்வாக இருக்கும்போது பிடித்து ஆதரிக்க ஒரு கை, நான் மகிழ்ச்சியாக இருக்கும்போது சந்தோஷப்படும் உள்ளம். ஒரு சிறந்த பாதி நான் மிகவும் நன்றாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பேன் என் வாழ்நாள் முழுவதும். என் வாழ்க்கையின் அன்பை நான் திருமணம் செய்துகொள்கிறேன் என்பதை உங்களுக்கு அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கி வரும் கர்ணன் படத்திலும் செல்வா தான் எடிட்டராகப்பணியாற்றுகிறார்.

காதலியைக் கரம் பிடித்த கர்ணன் பட எடிட்டர்!
காதலியைக் கரம் பிடித்த கர்ணன் பட எடிட்டர்!
காதலியைக் கரம் பிடித்த கர்ணன் பட எடிட்டர்!

Share this story