மகனுக்கு வில்லனாகும் விக்ரம்… எதிர்பார்ப்பை அதிகரிக்கும் ‘சியான் 60’ #chiyaan 60

மகனுக்கு வில்லனாகும் விக்ரம்… எதிர்பார்ப்பை அதிகரிக்கும் ‘சியான் 60’ #chiyaan 60

துருவ் விக்ரமுக்கு வில்லனாக அவரது தந்தை விக்ரமே நடிப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

மகனுக்கு வில்லனாகும் விக்ரம்… எதிர்பார்ப்பை அதிகரிக்கும் ‘சியான் 60’ #chiyaan 60

‘சியான் 60’ படத்தில் விக்ரம் – துருவ் விக்ரம் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக சிம்ரனும், துருவ் விக்ரமுக்கு ஜோடியாக வாணிபோஜனும் நடித்து வருகின்றனர். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் பிரொக்ஷன் சார்பில் லலித்குமார் தயாரித்து வருகிறார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

மகனுக்கு வில்லனாகும் விக்ரம்… எதிர்பார்ப்பை அதிகரிக்கும் ‘சியான் 60’ #chiyaan 60

இதில் பாபி சின்ஹா, சனந்த் ரெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஷூட்டிங்கில் தொடங்கியபோது துருவ் விக்ரம், வாணி போஜன் இணைந்து நடிக்கும் சில காட்சிகள் படமாக்கப்பட்டதாக தகவல் வெளியானது. மொத்தம் 90 நாட்களில் பிளான் பண்ணப்பட்டுள்ள இந்த ஷூட்டிங், முதற்கட்டமாக ஒருமாதம் வரை நடைபெற உள்ளது.

மகனுக்கு வில்லனாகும் விக்ரம்… எதிர்பார்ப்பை அதிகரிக்கும் ‘சியான் 60’ #chiyaan 60

இந்நிலையில் இந்த படத்தில் துருவுக்கு வில்லனாக விக்ரம் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளும் சண்டை காட்சிகளை சுவாரஸ்யமான படமாக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். துருவ் விக்ரமுடன் வில்லனாக விக்ரம் நடிப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Share this story