யார் இந்த கே.வி ஆனந்த்!? அவரைப் பற்றி சிறிய தொகுப்பு!

யார் இந்த கே.வி ஆனந்த்!?  அவரைப் பற்றி சிறிய தொகுப்பு!

இந்தியாவின் தலைசிறந்த ஒளிபரப்பாளராக இருந்தவர் கே.வி.ஆனந்த். இவரின்‌ ஒளிப்பதிவுக்கு இந்திய சினிமாவில் தனி இடம் உண்டு. தமிழைத் தாண்டி இந்தியிலும், மலையாளத்திலும் பணியாற்றியுள்ளார். விகடன் நிறுவனத்தில் புகைப்பட கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கிய அவர், பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் பணியாற்றிய வந்தார்.

யார் இந்த கே.வி ஆனந்த்!?  அவரைப் பற்றி சிறிய தொகுப்பு!

அதன்பின் மோகன்லால் நடித்த ‘தேன்மாவின் கொம்பத்து’ மலையாள படம் மூலம் ஒளிப்பதிவாளரானார். இந்த படத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக சிறந்த ஒளிப்பதிவாளராக தேசிய விருது பெற்றார். பின்னர் ‘காதல் தேசம்’ மூலம் தமிழில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து இவர் ஒளிப்பதிவு செய்த நேருக்கு நேர்,முதல்வன், பாய்ஸ்,செல்லமே, சிவாஜி உள்ளிட்ட திரைப்படங்கள் புகழ்பெற்றவை.

யார் இந்த கே.வி ஆனந்த்!?  அவரைப் பற்றி சிறிய தொகுப்பு!

ஒளிப்பதிவாளராக சிறந்து விளங்கிய கே.வி.ஆனந்த்,இயக்குனராக தடம் பதித்து சில படங்கள் இயக்கியுள்ளார். 2005-ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான ‘கனாக் கண்டேன்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் அதன்பிறகு அயன், கோ, மாற்றான், அனேகன், கவண், காப்பான் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

யார் இந்த கே.வி ஆனந்த்!?  அவரைப் பற்றி சிறிய தொகுப்பு!

இந்நிலையில் கொரானா தொற்று காரணமாக மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கே.வி.ஆனந்த்,இன்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவர், இன்று நம்மோடு இல்லை என்றாலும் அவரின் சிறந்த ஒளிப்பதிவாலும். திரைப்படங்களாலும் எப்போதும் நம்மோடு வாழ்ந்துக்கொண்டிருப்பார் என்பதுதான் நிசர்சனமான உண்மை.

யார் இந்த கே.வி ஆனந்த்!?  அவரைப் பற்றி சிறிய தொகுப்பு!

Share this story