தெலுங்கு படத்தில் வில்லனாகும் அருண் விஜய் ?.. விரைவில் அறிவிப்பு !

தெலுங்கு படத்தில் வில்லனாகும் அருண் விஜய் ?.. விரைவில் அறிவிப்பு !

லிங்குசாமி இயக்கும் தெலுங்கு படத்தில் வில்லனாக நடிக்க அருண் விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

தெலுங்கு படத்தில் வில்லனாகும் அருண் விஜய் ?.. விரைவில் அறிவிப்பு !

தமிழின் முன்னணி இயக்குனரான லிங்குசாமி, ஆனந்தம், ரன், சண்டகோழி, பையா போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றவர். கடைசியாக அவர் இயக்கிய ‘சண்டக்கோழி 2’ பெரிய வெற்றியை பெறவில்லை. தற்போது தெலுங்கில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரபல நடிகர் ராம் பொத்தினேனி ஹீரோவாக நடிக்கிறார்.

தெலுங்கு படத்தில் வில்லனாகும் அருண் விஜய் ?.. விரைவில் அறிவிப்பு !

ராம் பொத்தினேனி ஜோடியாக ‘உப்பென்னா’ புகழ் நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கவுள்ளார். சீனிவாச சில்வர் ஸ்கிரீன் தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் முடிந்துள்ளது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் உருவாகிறது.

தெலுங்கு படத்தில் வில்லனாகும் அருண் விஜய் ?.. விரைவில் அறிவிப்பு !

இந்த படத்தில் வில்லனாக நடிக்க வலிமையான ஒரு நடிகரை தேடி வருகிறார் லிங்குசாமி. முதற்கட்டமாக நடிகர் மாதவனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவரிடமிருந்து எந்த பதிலும் இன்னும் வரவில்லை. இந்நிலையில் ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜீத்துக்கு வில்லனாக நடித்து விக்டர் என்ற கதாபாத்திரத்தில் பிரபலமானார் நடிகர் அருண் விஜய். அதனால் இந்த படத்தில் அருண் விஜய்யை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறராதாம். விரைவில் இவர்களில் யார் வில்லன் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

Share this story