இயக்குனர் வெங்கட் பிரபுவின் தாயார் மறைவு!

இயக்குனர் வெங்கட் பிரபுவின் தாயார் மறைவு!

கங்கை அமரனின் மனைவியும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் தாயுமான மணிமேகலை உடல்நலக் குறைவால் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 69.

தமிழ் சினிமாவின் பன்முகத்திறமை கொண்ட கலைஞராக வலம் வருபவர் கங்கை அமரன். இயக்குனர், எழுத்தாளர், இசையமைப்பாளர் என அனைத்து களத்திலும் திறம்பட பணியாற்றியுள்ளார்.

இயக்குனர் வெங்கட் பிரபுவின் தாயார் மறைவு!

இந்நிலையில் கங்கை அமரனின் மனைவி மணிமேகலை உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் வைத்து தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். தற்போது நேற்று அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் சென்னை காவேரி மருத்துவமனையில் நேற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதையடுத்து கங்கை அமரன், வெங்கட் பிரபு உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு திரைத்துறை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Share this story