உங்களுக்கு வேலை இல்லையா? ஒரு நடிகரைக் கட்டுப்படுத்தாதீர்கள்: விஜய் சேதுபதிக்கு ஆதரவாக களமிறங்கிய ராதிகா!

உங்களுக்கு வேலை இல்லையா? ஒரு நடிகரைக் கட்டுப்படுத்தாதீர்கள்: விஜய் சேதுபதிக்கு ஆதரவாக களமிறங்கிய ராதிகா!

800 படத்திற்காக பலர் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நடிகை ராதிகா அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி இலங்கை கிரிக்கெட் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டதிலிருந்தே திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் மக்கள் பலர் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

800

அதுமட்டுமில்லாமல் ‘800’ படத்தின் மோஷன் போஸ்டரில் இலங்கை போரின் நிகழ்வுகளும் இடம் பெற்றிருந்தது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பாரதிராஜா, சீனு ராமசாமி, சேரன், வைரமுத்து, பாடலாசிரியர் தாமரை என ஏராளமானோர் விஜய் சேதுபதி அந்தப் படத்திலிருந்து விலகவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

உங்களுக்கு வேலை இல்லையா? ஒரு நடிகரைக் கட்டுப்படுத்தாதீர்கள்: விஜய் சேதுபதிக்கு ஆதரவாக களமிறங்கிய ராதிகா!

இந்நிலையில் ஒரு நடிகரைத் தடுக்காதீர்கள் என ராதிகா, விஜய் சேதுபதிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்

“முத்தையா முரளிதரன் பையோபிக், விஜய் சேதுபதி அந்தப் படத்தில் நடிக்கக் கூடாது என்று சொல்பவர்களுக்கு வேறு வேலை கிடையாதா? நீங்கள் ஏன் சன் ரைசெர்ஸ் அணியிடம் கேட்கவில்லை. அரசியல் ஈடுபாடு கொண்ட நபரின் அணியில் தான் அவர் தலைமைப் பயிற்சியாளராக இருக்கிறார். விஜய் சேதுபதி ஒரு நடிகர், ஒரு நடிகரைத் தடுக்காதீர்கள். விஜய் சேதுபதி மற்றும் கிரிக்கெட் இரண்ட்டிற்கும் உங்கள் வாரண்ட் தேவையில்லை முட்டாள்களே” என்று தெரிவித்துள்ளார்.

Share this story