ரஜினி நடிக்க இருந்த ‘பாபநாசம்’ படத்தில் கமல் நடித்ததன் பின்னணி என்ன!?

ரஜினி நடிக்க இருந்த ‘பாபநாசம்’ படத்தில் கமல் நடித்ததன் பின்னணி என்ன!?

நடிகர் கமல்ஹாசன் வழக்கான ஹீரோக்களைப் போல் அல்லாமல் எப்போதும் புதுமையான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பவர். தனது ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு புதுமையைப் புகுத்துபவர். 2008 ஆம் ஆண்டில் வெளியான ‘தசாவதாரம்’ படத்தில் ஒரே நேரத்தில் 10 வேடங்களில் நடித்து சாதனை புரிந்தார். ‘தசாவதாரம்’ படத்திற்குப் பிறகு ‘விஸ்வரூபம்’ படத்தில் உலகத்தர சினிமாவை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
ரஜினி நடிக்க இருந்த ‘பாபநாசம்’ படத்தில் கமல் நடித்ததன் பின்னணி என்ன!?
அதையடுத்து, கமல்ஹாசன் நடித்த ‘பாபநாசம்’ படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. குடும்பத்தைக் காப்பாற்ற களத்தில் குதித்த ஒரு குடும்பத் தலைவனின் கதை தமிழ்நாட்டின் அனைத்து குடும்பங்களாலும் பாராட்டப்பெற்றது.
மலையாளத்தில் மோஹன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் என்ற படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடைந்தது. அந்தப் படத்தின்தமிழ் ரீமேக் தான் பாபநாசம்.
ரஜினி நடிக்க இருந்த ‘பாபநாசம்’ படத்தில் கமல் நடித்ததன் பின்னணி என்ன!?
படத்தின் ஒவ்வொரு நிமிடமும் பார்வையாளர்களை சீட் நுனியில் உட்கார வைத்தார் இயக்குனர் ஜீத்து ஜோசப். பாபநாசம் படத்தில் நடிகர் கமல்ஹாசனின் கதாபாத்திர பெயர் சுயம்புலிங்கம். இயக்குனர் ஜீது ஜோசப் முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை தான் சுயம்புலிங்கம் கதாபாத்திரத்தில் நடி க்க வைக்க விரும்பினார்.
நடிகர் ரஜினிகாந்த் வித்தியாசமாக நடிக்க விரும்பினாலும், அவரது ரசிகர்கள் கமெர்சியல் படங்களைத் தான் அவரிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள். பாபநாசம் படத்தில் ஒரு சண்டைக் காட்சி கூட இடம்பெறவில்லை. ‘இந்தப் படத்தில் நான் நடித்தால் அது எனது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கும்’ என்று கூறி ரஜினிகாந்த் பாபநாசம் படத்தை நிராகரித்ததாகக் கூறப்படுகிறது.
ரஜினி நடிக்க இருந்த ‘பாபநாசம்’ படத்தில் கமல் நடித்ததன் பின்னணி என்ன!?
‘கமல் இந்தப் படத்தில் நடித்தால் அவரது அவரது இயல்பான யதார்த்தமான நடிப்பு அனைத்து ரசிகர்களையும் ரசிக்கச் செய்யும்” என்று ரஜினி கூறியுள்ளார். ரஜினி கூறியதால் தான் கமல் இந்தப் படத்தில் நடித்தார் என்றும் கூறப்படுகிறது.

Share this story