தமிழில் ரீமேக் ஆகும் ‘த்ரிஷ்யம் 2’… ஆனா வேற டீம்!?

தமிழில் ரீமேக் ஆகும் ‘த்ரிஷ்யம் 2’… ஆனா வேற டீம்!?

2013-ம் ஆண்டு இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா ஆகியோர் நடிப்பில் வெளியான ‘த்ரிஷ்யம்’ திரைப்படம் வேற லெவல் ஹிட் அடித்தது. ஒரு படத்தில் அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சிகள், தேவையில்லாத ஹீரோ-ஹீரோயின் ரொமான்ஸ், கதைக்கு சம்பந்தமே இல்லாத காமெடி இவை எதுவுமே தேவையில்லை, நேர்த்தியான கதையும் அதை கோர்வையாக இணைக்கும் திரைக்கதையும் இருந்தாலே போதும் படம் வெற்றி அடைந்துவிடும் என்பதற்கு த்ரிஷ்யம் எடுத்துக்காட்டாக அமைந்தது.

தமிழில் ரீமேக் ஆகும் ‘த்ரிஷ்யம் 2’… ஆனா வேற டீம்!?

பின்னர் த்ரிஷ்யம் 2 படம் அறிவிக்கப்பட்டது. இதன்பிறகு இந்தப் படத்தை எப்படி முன்னோக்கி நகர்த்த முடியும், அப்படியே செய்தாலும் மோகன்லால் மாட்டிக்கொள்வாரே? என்று நினைத்தால் அனைவரையும் வியக்க வைத்தது த்ரிஷ்யம் 2 திரைப்படம். இரண்டாம் பாகமும் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது.

த்ரிஷ்யம் முதல் பாகம் தமிழில் கமல்ஹாசன் மற்றும் கவுதமி நடிப்பில் வெளியானது. ஜீத்து ஜோசப்பே தமிழிலும் இயக்கினார். தற்போது த்ரிஷ்யம் 2 வெற்றி அடைந்துள்ளதால் மற்ற மொழிகளிலும் ரீமேக் வேலைகள் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளன. தெலுங்கில் வெங்கடேஷ் நடிக்க ஜீத்து ஜோசப் இயக்குகிறார்.

மோகன்லாலின் தரமான செய்கை… சிறப்பான இரண்டாம் பாகம்… த்ரிஷ்யம் 2 விமர்சனம்!

தமிழில் ரீமேக் ஆகும் ‘த்ரிஷ்யம் 2’… ஆனா வேற டீம்!?

இதையடுத்து தமிழில் இரண்டாம் பாகம் ரீமேக் ஆகுமா என்ற கேள்வி எழுந்தது. தற்போது த்ரிஷ்யம் 2 தமிழில் ரீமேக் ஆவது உறுதியாகியுள்ளது. ஆனால் ஜீத்து ஜோசப் மிகவும் பிசியாக உள்ளார். தெலுங்கில் த்ரிஷ்யம் 2 படத்தை இயக்கி முடித்ததும் மலையாளத்தில் மோகன்லால் மற்றும் த்ரிஷா நடிக்கும் ‘ராம்’ என்ற படத்தை இயக்கவிருக்கிறார். அதனால் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் இந்தப் படத்தை இயக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன், கவுதமி இருவரும் மீண்டும் இணைந்து நடிப்பார்களா என்ற கேள்வியும் நிலவி வருகிறது. அறிவிப்புகளுக்கு காத்திருப்போம்!

Share this story