இன்டர்நெட்டில் லீக் ஆன ட்ரைலர்… ட்ரைலரை உடனே வெளியிட்டுள்ள ‘த்ரிஷ்யம் 2’ படக்குழு!
‘த்ரிஷயம் 2‘ படத்தின் ட்ரைலர் இன்டர்நெட்டில் லீக் ஆனதை அடுத்து படத்தின் ட்ரைலரை படக்குழு சொன்ன தேதிக்கு முன்னரே வெளியிட்டுள்ளனர்.
த்ரிஷ்யம் 2 திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக உள்ளது. நேற்று த்ரிஷயம் 2 படத்தின் ட்ரைலர் வரும் பிப்ரவரி 8-ந்தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். ஆனால் எப்படியோ படத்தின் ட்ரைலர் இணையத்தில் கசிந்துள்ளது. இதனால் படக்குழு ட்ரைலரை அறிவித்த தேதிக்கு முன்னரே வெளியிட இருப்பதாக முன்னரே செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதே போல் தற்போது த்ரிஷ்யம் 2 படத்தின் ட்ரைலர் அமேசான் ப்ரைம் யூடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
ட்ரைலர் விறுவிறுப்பாக காட்சிகளுடன் நகர்கிறது. முதல் பாகத்தில் தெரியாமல் நடந்த மரணத்திலிருந்து தன் குடும்பத்தை காப்பாற்றுகிறார் ஜார்ஜ் குட்டி. தற்போது இரண்டாம் பாகத்தில் மீண்டும் அந்த கொலை வழக்கு விசாரிக்கப்படுகிறது. அதிலிருந்து ஜார்ஜ் குட்டி தனது குடும்பத்தை மீண்டும் எப்படி காப்பாற்றப்போகிறார் என்பதே இரண்டாம் பாகத்தின் கதையாக இருக்கும் என்று யூகிக்கமுடிகிறது.
திரிஷ்யம் 2 படம் பிப்ரவரி 19-ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.