”ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒரு ஜார்ஜ் குட்டி இருக்கிறார்” – மோகன் லால் ட்வீட் …

”ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒரு ஜார்ஜ் குட்டி இருக்கிறார்” – மோகன் லால் ட்வீட் …

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒரு ஜார்ஜ் குட்டி இருக்கிறார் என‌ நடிகர் மோகன் லால் ட்வீட் செய்துள்ளார்.

”ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒரு ஜார்ஜ் குட்டி இருக்கிறார்” – மோகன் லால் ட்வீட் …

கடந்த 2013ம் ஆண்டு ஜீத்து ஜோசப் – மோகன்லால் கூட்டணியில் வெளியான படம் ‘திரிஷ்யம்’. இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என 4 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றிப்பெற்றது. தமிழில் கமல் நடிப்பில் பாபநாசமும், தெலுங்கு வெங்கடேஷ் நடிப்பிலும்,கன்னடத்தில் ரவிச்சந்திரன் நடிப்பிலும், ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பிலும் வெளியாகி வெற்றி பெற்றது. சீன‌மொழியிலும் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டது.

”ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒரு ஜார்ஜ் குட்டி இருக்கிறார்” – மோகன் லால் ட்வீட் …

இதையடுத்து 7 ஆண்டுகள் கழித்து பிறகு திரிஷ்யம் இரண்டாம் பாகத்தை உருவாக்கியுள்ளார் ஜீத்து ஜோசப். மோகன் லால், மீனா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியானது. முதல் பாகத்தை போன்று இரண்டாம் பாகமும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் திரிஷ்யம் 2 குறித்து தனது சமூக வலைத்தளத்தில் மோகன்லால் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒரு ஜார்ஜ் குட்டி இருக்கிறார். உங்களது ரியல் ஹீரோ குறித்த புகைப்படங்களை பதிவு செய்து ஒரு ஆச்சரியத்திற்காக காத்திருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this story