திரிஷ்யம் 2 படத்தில் இணைந்த நடிகை பூர்ணா…

திரிஷ்யம் 2 படத்தில் இணைந்த நடிகை பூர்ணா…

திரிஷ்யம் 2 தெலுங்கு ரீமேக்கில் நடிகை பூர்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

திரிஷ்யம் 2 படத்தில் இணைந்த நடிகை பூர்ணா…

மலையாளத்தில் மோகன் லால் நடித்து மாபெரும் வெற்றியை பெற்ற ‘திரிஷ்யம்’. இந்த படத்தில் மோகன் லாலுக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார். ஜீத்து ஜோசப் இயக்கிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியையடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பலமொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

திரிஷ்யம் 2 படத்தில் இணைந்த நடிகை பூர்ணா…

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகமும் வெளியாகி மலையாளத்தில் மாபெரும் ஹிட்டடித்தது. இதனால் இரண்டாம் பாகத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய திட்டுமிட்டு தெலுங்கு ரீமேக் பணிகளை ஆரம்பித்துள்ளார் ஜீத்து ஜோசப். இதையடுத்து தெலுங்கு திரிஷ்யம் 2 படத்திற்கான பூஜை சமீபத்தில் ஹைதாரபாத்தில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

திரிஷ்யம் 2 படத்தில் இணைந்த நடிகை பூர்ணா…

இந்நிலையில் தெலுங்கு ரீமேக்கில் நடிகை பூர்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திரிஷ்யம் 2-ல் மோகன்லால் சார்பாக வாதாடும் அட்வகேட்டாக நடிகை சாந்தி பிரியா நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்தில் நடிகை பூர்ணா தெலுங்கில் நடிக்க உள்ளார். தெலுங்கு திரிஷ்யம் 2 ஷூட்டிங்கில் வெங்கடேஷ், மீனா ஆகியோர் கலந்துகொண்டு நடித்து வருகின்றனர். நடிகை பூர்ணா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதால் விரைவில் ஷூட்டிங்கில் கலந்துக்கொள்ள உள்ளார்.

Share this story