சோனு சூட்டை கவுரவிக்கும் இந்தியத் தேர்தல் ஆணையம்!

சோனு சூட்டை கவுரவிக்கும் இந்தியத் தேர்தல் ஆணையம்!

நடிகர் சோனு சூட்டை இந்தியத் தேர்தல் ஆணையம் கவுரவித்துள்ளது.

பாலிவுட் நடிகர் சோனு சூட் கொரோனா காலத்தில் மக்கள் பலருக்கு உதவினார். தற்போதும் தொடர்ந்து உதவி வருகிறார். நாடு முழுதும் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து சிக்கிக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவர்கள் சொந்த ஊர் செல்ல வசதி செய்தி கொடுத்து உணவு தங்கும் வசதி ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார். இன்னும் ஏராளமான பல உதவிகளைச் செய்துள்ளார்.

சோனு சூட்டை கவுரவிக்கும் இந்தியத் தேர்தல் ஆணையம்!

சமீபத்தில் ஐ.நா அமைப்பு சோனு சூட்டின் சமூக சேவையைப் பாராட்டி அவருக்கு சிறந்த மனிதநேய செயல்பாட்டாளருக்கான விருது அளித்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது பஞ்சாப் தலைமை தேர்தல் அதிகாரி கருணா ராஜூ இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய பரிந்துரையில், சோனு சூட்டை பஞ்சாபின் மாநில அடையாள சின்னமாக நியமிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார். தேர்தல் ஆணையம் சார்பிலும் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இது அவருக்கு கிடைத்த மற்றுமொரு அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.

Share this story