ஷூட்டிங் வராமல் காணாமல் போன விஷால்… துபாயில் திணறிய எனிமி படக்குழு!?
அரிமாநம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் தற்போது ‘எனிமி‘ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்கிறார். மிருணாளினி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தை வினோத் என்பவர் தயாரிக்கிறார்.
இந்தப்படத்தின் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கியது. ஹைதராபாத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்தது. அதையடுத்து சிறிய இடைவெளிக்குப் பின்னர் தற்போது துபாயில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

அங்கு படப்பிடிப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். விஷால் தான் வருவதாக உறுதியளித்த தேதியை விட சில நாட்கள் கழித்து தாமதமாகத் தான் அங்கு சென்றாராம். பின்னர் ஓரிரு நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட விஷால் அடுத்து மீண்டும் காணாமல் போய்விட்டாராம். மூன்று நாட்களுக்கு மேலாக அவரைத் தொடர்பு கொள்ளவும் முடியவில்லையாம். பின்னர் வந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டாராம்.
இந்த சிக்கலால் படக்குழு துபாயில் மேலும் சில நாட்கள் தங்கி படப்பிடிப்பு நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் படத்தின் பட்ஜெட் அதிகரித்துக் கொண்டே போகிறதாம். இதனால் தயாரிப்பாளர் வினோத் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சிம்புவுக்கு அடுத்த இடத்தை விஷால் பிடிக்கப்போகிறார் என்று கோலிவுட் வட்டாரங்கள் பேசி வருகின்றன.