‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படத்தின் எதோ சொல்ல பாடலின் வீடியோ ரிலீஸ் அப்டேட்!

‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படத்தின் எதோ சொல்ல பாடலின் வீடியோ ரிலீஸ் அப்டேட்!

ஷாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படத்தின் எதோ சொல்ல பாடல் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.

சாந்தனு நடிப்பில் ஸ்ரீஜர் என்பவர் இயக்கத்தில் முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. நடிகை அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் பாக்யராஜ், யோகிபாபு, மனோபாலா, பிக்பாஸ் ரேஷ்மா, மதுமிதா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்துள்ளார்.

‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படத்தின் எதோ சொல்ல பாடலின் வீடியோ ரிலீஸ் அப்டேட்!

சில வாரங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்திலிருந்து எதோ சொல்ல என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்களால் வரவேற்கப்பட்டது.

‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படத்தின் எதோ சொல்ல பாடலின் வீடியோ ரிலீஸ் அப்டேட்!

தற்போது ‘எதோ சொல்ல’ வீடியோ பாடல் பிரத்யேகமாக வெளியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். நாளை மாலை 04.45 மணிக்கு வீடியோ வெளியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

Share this story