“அவருக்கு நேற்று கல்யாணம் முடிந்தது”… பிரபல இயக்குனரின் குடும்பத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய பேஸ்புக் அப்டேட்!

“அவருக்கு நேற்று கல்யாணம் முடிந்தது”… பிரபல இயக்குனரின் குடும்பத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய பேஸ்புக் அப்டேட்!

இயக்குனர் சீனு ராமசாமியின் பேஸ்புக் பக்கத்தில், அவருக்கு நேற்றுதான் திருமணம் ஆக்கியுள்ளது என்று அவர் கணக்கிலிருந்தே வெளியான பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் சீனு ராமசாமி தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர். இவரின் அனைத்து படங்களிலும் திரைக்கதைக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பார். தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்கள் வாயிலாக தன்னுடைய எண்ணங்களை மக்களுடன் பகிர்ந்து வருவார்.

“அவருக்கு நேற்று கல்யாணம் முடிந்தது”… பிரபல இயக்குனரின் குடும்பத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய பேஸ்புக் அப்டேட்!

இந்நிலையில், அவரது பேஸ்புக் கணக்கில் அவருக்கு நேற்று தான் திருமணம் ஆனது(Got Married Yesterday) என்றவாறு பதிவு வெளியானது. இதைப் பார்த்த ரசிகர்கள் அவர் மீண்டும் திருமணம் செய்த்துவிட்டாரா? என்று குழம்பினர்.

பின்னர் அதுகுறித்த விளக்கமளித்த இயக்குனர் “இது தவறான தகவல் எனக்கு 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்து எனது மனைவி மகள்களுடன் மகிழ்வாக வாழ்ந்து வருகிறேன்.அப்டேட் டவுன் லோடு செய்ததில் ஏற்பட்ட பிழைக்கு வருந்துகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

அவரின் இந்த பதிவைப் பார்க்கும் நெட்டிசன்கள் புதுசா கல்யாணம் ஆகியிருக்கு எப்ப சார் ட்ரீட்டு என்றவாறு கலாய்த்து வருகின்றனர்.

இதற்கு முன்னர் ஐஸ்வர்யா ராஜேஷை மங்கலான நிறமுடைய பெண் என்று குறிப்பிட்டதற்கு அவரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்தது குறிப்பிடத்தக்கது!

Share this story