ஜிப்ரான் இசையில், சித் ஸ்ரீராம் குரலில் ‘மாறா’ படத்தின் முதல் பாடல் வெளியீடு!

ஜிப்ரான் இசையில், சித் ஸ்ரீராம் குரலில் ‘மாறா’ படத்தின் முதல் பாடல் வெளியீடு!

மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள மாறா படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகவுள்ளது.

மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் ஆகியோர் நடிப்பில் ‘மாறா’ திரைப்படம் உருவாகியுள்ளது. மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘சார்லி’ படத்தின் தமிழ் ரீமேக் என்று கூறப்படுகிறது. எனவே இப்படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் இப்படத்தில் ஷிவதா, அலெக்சாண்டர் பாபு மற்றும் மௌலி ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஜிப்ரான் இசையில், சித் ஸ்ரீராம் குரலில் ‘மாறா’ படத்தின் முதல் பாடல் வெளியீடு!

மாறா படத்தில் முதல் பாடலான யார் அழைப்பது என்ற பாடல் நாளை(28-10-2020) வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பாடலை கவிஞர் தாமரை எழுதியுள்ளார். ஜிப்ரான் இசையில் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.

இப்படத்தை அறிமுக இயக்குனர் திலிப் குமார் இயக்கியுள்ளார். மாறா படம் அமேசான் ப்ரைம் தளத்தில் டிசம்பர் 17 அன்று வெளியாகிறது.

ஜிப்ரான் இசையில், சித் ஸ்ரீராம் குரலில் 'மாறா' படத்தின் முதல் பாடல் வெளியீடு!

Share this story